BREAKING: செக்ஸ் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பு!

April 25, 2018

ஜோத்பூர் (25 ஏப் 2018): பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தின் சூரத், உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுமிகள் சாமியார் ஆசாராம் பாபு தங்களை வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2013-ம் ஆண்டு ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆசாராம் பாபு.

இந்நிலையில் இவர் மீதான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மதுசூதன் சர்மா இன்று தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி சிறையில் சென்று அவர் அளித்த தீர்ப்பில் ஆசாராம் பாபு குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

சாமியார் ஆசாராம் பாபுவுக்கு நாடெங்கும் சுமார் 400 ஆசிரமங்கள் உள்ளன. மேலும் பல லட்சம் பக்தர்கள் அவருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பை ஒட்டி ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!