ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு - சதியா?

ஏப்ரல் 27, 2018 686

புதுடெல்லி (27 ஏப் 2018): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து விமானம் தரையிறக்கப் பட்டது.

வட கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல் காந்தி விமானத்தில் பயணம் செய்தபோது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ஹூப்ளி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. ராகுல் காந்தி உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் பத்திரமாக இறங்கினர். இச்சம்பவம் தொடர்பாக ஹூப்ளியில் உள்ள கோகுல் காவல் நிலையத்தில் காங்கிரசார் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ராகுல் காந்தியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என டெல்லியில் உள்ள விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் பயணித்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...