யோகி ஆதித்யநாத் மீது ஆர்.எஸ்.எஸ் அதிருப்தி!

ஏப்ரல் 29, 2018 973

லக்னோ (29 ஏப் 2018): யோகி ஆதித்யநாத்தின் தலைமையிலான உத்திர பிரதேச அரசு மீது ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ் ஸின் கொள்கைகளை உபியில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்காகவே யோகி ஆதித்யநாத்தை பாஜக உ.பியில் முதல்வராக நியமித்தது. ஆனால் யோகியின் நடவடிக்கையில் தற்போது ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

வரும் நாடாளு மன்ற தேர்தலில் உத்திர பிரதேசம்தான் பாஜகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாநிலம் என்று கருதப் படுகிறது. ஆனால் பாஜக மீது தற்போது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பும் உத்திர பிரதேசத்தின் தற்போதைய நிலை ஆகியவை பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக தேர்தல் பிசியில் இருக்கும் அமித்ஷா, பிறகு உத்திர பிரதேசத்தில் முழு கவனம் செலுத்துவார் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...