காஷ்மீரில் இளம் பெண்ணை வன்புணர்வு செய்த ரிசர்வ் போலீஸ் படையினர்!

ஏப்ரல் 29, 2018 799

ஜம்மு (29 ஏப் 2018): ஜம்மு காஷ்மீரில் இளம் பெண் ஒருவரை வன்புணர்வு செய்த (சிஆர்பிஎஃப்) மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகரிகள் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 24 வயது மதிக்கத் தக்க இளம் பெண்ணை மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகரிகள் மூன்று பேர் கேம்பில் வைத்து வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோவை உலவ விட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மூன்று பேரும் இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...