என்னை கொல்ல சதி - லாலு பிரசாத் யாதவ் பகீர் குற்றச்சாட்டு!

ஏப்ரல் 30, 2018 646

புதுடெல்லி (30 ஏப் 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலிருந்து வெளியேற்றப் பட்ட லாலு பிரசாத் யாதவ் தன்னை கொல்ல சதி நடப்பதாக தெரிவித்துள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பின் அங்கு மருத்துவம் சரியில்லை என்று, கூறி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நார்மலாக இருப்பதால் , ராஞ்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடரலாம் என்று அவர் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள லாலு பிரசாத் யாதவ், தன்னை கொல்ல சதி நடப்பதாக தெரிவித்து அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார். மேலும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து எனக்கு தெரியும் என்றும் லாலு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...