சிறுமி வன்புணர்வு படுகொலை பெரிய விவகாரம் அல்ல - காஷ்மீர் துணை முதல்வர் திமிர் பேச்சு!

மே 01, 2018 744

ஜம்மு (01 மே 2018): காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட விவகாரம் பெரிய விசயம் அல்ல என்று காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடெங்கும் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

காஷ்மீர் முதல்வர் மஹபூபா முஃப்தி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் காஷ்மீர் அமைச்சரவை மாற்றம் செய்யப் பட்டபோது துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த கவிந்தர் குப்தா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், செய்தியாளர்களிடம் பேசுகையில், "காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட விவகாரம் சிறிய விவகாரம் இதனை பெரிது படுத்த வேண்டியதில்லை" என தெரிவித்தார். கவிந்தர் குப்தாவின் பேச்சு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் சிறுமியை வன்புணர்ந்து படுகொலை செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கத்துவா பாஜக எம்.எல்.ஏ மற்றும் பாஜக அமைச்சர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...