தலித் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது!

மே 01, 2018 629

பதுன் (01 மே 2018): உத்திர பிரதேசத்தில் தலித் இனத்தை சேர்ந்த ஒருவர் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் அருந்துமாறு வற்புறுத்திய உயர் ஜாதியினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

உத்திர பிரதேசம் பதுன் பகுதியில், விஜய் சிங் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலித் ஒருவரை தக்கியதோடு அவரின் சிறுநீரை அருந்த வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரும் கைது செய்யப் பட்டனர். மேலும் அவர்கள் மீது செக்சன் 323 மற்றும் 504, 342 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படுவார்கள் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...