என் கணவர் அப்பாவி - மதரஸா ஆசிரியரின் மனைவி!

மே 02, 2018 919

புதுடெல்லி (02 மே 2018): என் கணவர் அப்பாவி என்று காசிப்பூரில் சிறுமி வன்புணர்வு தொடர்பாக கைது செய்யப் பட்டுள்ள மதரஸா அசிரியரின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்பு காசிப்பூர் மதரஸாவில் அந்த சிறுமியை போலீசார் மீட்ட்டனர். அங்கு அச்சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டதாகவும்,  இதில் தொடர்புடையதாக 17 வயது சிறுவன் மற்றும் மதரஸா ஆசிரியர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து வன்புணர்வு செய்யப் பட்ட பெண் தெரிவிக்கையில், "என்னை கடத்தியவன் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்தான் எனக்கு ஒரு திரவத்தை குடிக்க தந்தான். பின்பு அதனை குடித்தவுடன் மயங்கிவிட்டேன். மீண்டும் எழுந்து பார்த்தபோது என் ஆடைகள் நனைந்திருந்தன." என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைது செய்யப் பட்டுள்ள மதரஸா ஆசிரியரின் மனைவி தெரிவிக்கையில்," என் கணவர் அப்பவி. அவர் ஒருபோதும் இதுபோன்ற செயலை செய்ய மாட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக மதரஸாவில் பல பெண்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். அவர் மீது இதுவரை எந்த குற்றச் சாட்டும் இல்லை. இதன் பின்னணியில் வேறு ஏதோ சதி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...