அலிகார் முஸ்லிம் பலகலை கழகத்தில் மாணவர்களிடையே பயங்கர மோதல்!

மே 02, 2018 894

அலிகார் (02 மே 2018): முஸ்லிம் லீக் கட்சியின் தந்தை என வர்ணிக்கப் படும் முஹம்மது அலி ஜின்னா ஓவியம் காணமல் போனதைத் தொடர்ந்து அலிகார் பல்கலை கழகத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் புகழ் பெற்ற அலிகார் பல்கலை கழகத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாஜக எம்.பி சதிஷ் கவுதம் மிரட்டல் விடுத்திருந்தார். மேலும் முஹம்மது அலி ஜின்னா இந்தியர் அல்ல என்றும் அவரது புகைப்படம் பல்கலை கழகத்திலிருந்து நீக்கப் பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அவரது புகைப் படம் பல்கலை கழக வளாகத்திலிருந்து காணாமல் போனது.

இந்நிலையில் இன்று பல்கலை கழகத்தில் இரண்டு பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 1938 ஆம் ஆண்டு முஹம்மது அலி ஜின்னாவின் புகைப் படம் நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...