யாரு இந்த நிர்மலா சீதாராமன் - குழம்பிப் போன மோடி!

மே 03, 2018 1294

பெங்களூரு (03 மே 2018): மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னடர் என்று கூறி பிரதமர் மோடி வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், பாஜகவிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். பல்லாரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கன்னடர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கன்னடர்கள் மோடியின் இந்த பேச்சை வைத்து கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழ் பெண்ணை கன்னடர் என்றதால் கன்னடர்கள் டிவிட்டரில் கொந்தளித்து போய் உள்ளனர். எப்படி ஒரு தமிழ்ப்பெண்ணை கன்னடர் என்று கூறலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரதமர் மோடிக்கு இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...