கத்துவா சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞரை பாராட்டிய ஹாலிவுட் நடிகை!

மே 05, 2018 801

புதுடெல்லி (05 மே 2018): காஷ்மீரில் வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்ட 8 வயது சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகாவை ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பாராட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் ராஸானா வனப்பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கோவில் குருக்கள், போலீஸ் அதிகாரி மற்றும் 9 பேர் கைது செய்யப் பட்டனர். இதில் ஒருவர் காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகரின் மகன். மற்றும் காவல்துறை உயரதிகாரியின் மகன், கல்லூரி மாணவன் என தெரியவந்தது. இந்த சம்பவம் காஷ்மீரில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாடெங்கும் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது ஜம்மு காஷ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தீபிகா சிங் ரஜாவத் எனும் பெண் வழக்கறிஞர் துணிச்சலாக கொல்லப்பட்ட சிறுமிக்காக தொடர்ந்து வாதாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு வந்த மிரட்டல்களைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வழக்கறிஞர் தீபிகாவை பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எம்மா வாட்சன் கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். அக்கட்டுரையில் வழக்கறிஞர் தீபிகாவின் தொழில் நேர்மையை எம்மா வாட்சன் புகழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும் அக்கட்டுரையை பகிர்ந்த எம்மா வாட்சன் எல்லா சக்தியும் தீபிகாவுடையதே என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...