நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்காக திறந்துவிடப் பட்ட மசூதிகள்!

மே 08, 2018 854

எர்ணாக்குளம் (08 மே 2018): நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுப்பதற்காக, கேரளாவில் மசூதிகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

நாடெங்கும் நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்திலிருந்து பல மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுத செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல், விடுதிகள், தங்கும் அறைகள் பன்மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கின்றன. இதனால் உணவு உண்ணவோ, ஓய்வெடுக்க இடமோ கிடைக்காமல் பெற்றோர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில் கேரளாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்களுடன் அவர்களுக்கு துணையாக வரும் பெற்றோர்களும் ஓய்வெடுக்க வசதியாக கேரள மாநிலம் மலயங்காடு வாடி ஹிரா மசூதி மற்றும் மஸ்ஜிதுல் அஸ்ஹார், மற்றும் எர்ணாகுளம் மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளும் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

கேரளாவில் இதுபோன்று நடப்பது முதல் முறையல்ல ஏற்கனவே இதுபோன்று நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...