பிரச்சார மேடை ஒன்றில், காங்கிரஸ் வேட்பாள நரேந்திர சாமியை புகழ்வதற்கு பதிலாக “அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர், வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது நம்மாலும் நரேந்திர மோடியாலும்தான்” என்றாரே பார்க்கலாம்.
அருகில் இருந்த வேட்பாளர் நரேந்திர சாமிக்கு தூக்கிவாரிப் போட்டது. அவசரமாக இடைமறித்து சித்தராமையாவைத் திருத்தினார்.
உடனேயே “சாரி சாரி நரேந்திர சாமி முக்கியமான வார்த்தை நரேந்திரா” என்று வழிந்தார்.
மேலும் பேசிய பேச்சை சமாளிக்க, தொடர்பில்லாமல் ஏதேதோ பேசி பேச்சை முடித்தார் முதல்வர் சித்தராமையா.