நீட் தேர்வில் அட்டூழியம் - மாணவிகளின் உள்ளாடையை கழட்டச் சொன்ன ஆசிரியர்!

மே 10, 2018 744

பாலக்காடு (10 மே 2018): நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடையை கழட்டச் சொன்ன ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 6 ஆம் தேதி பாலக்காடு மாவட்டம் கோப்பம் லயன் பள்ளியில் நடந்த நீட் தேர்வில் கேரளாவை சேர்ந்த மாணவியிடம் சோதனை செய்வதற்காக உள்ளாடையைக் கழட்ட ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சுமார் 25 மாணவிகளிடம் இதேபோல கொடூரம் நடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர் . இதனை அடுத்து போலீசார் சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...