கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - எக்ஸிட் போல் முடிவுகள்!

மே 12, 2018 841

பெங்களூரு (12 மே 2018): கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்கப் போவதில்லை என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை அன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பாஜக , மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் போட்டியிட்டன.

மொத்தம் 222 தொகுதிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 93 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சிக்கு 25 இடங்களிலும் , மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...