வாக்குச் சாவடியில் முஸ்லிம் பெண் புர்காவை அகற்றச் சொன்னதால் பரபரப்பு!

மே 13, 2018 906

பெங்களூரு (13 மே 2018): கர்நாடகாவில் வாக்குச் சாவடி ஒன்றில் முஸ்லிம் பெண் புர்காவை அகற்றச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டப் பேரவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் பெல்காவி பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற முஸ்லிம் பெண்ணின் புர்காவை அகற்ற வேண்டும் என்று அங்கிருந்த பாஜக ஏஜெண்ட் வலியுறுத்தியுள்ளார் மேலும் இதனால் அந்த பெண் அழுததாக கூறப் படுகிறது.

உடனே அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி உதவியுடன் தனியாக அழைக்கப் பட்டு வாக்கு அட்டையும் பெண்ணின் முகத்தையும் சரி பர்த்த பின்பு வாக்களிக்க அந்த பெண் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...