கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி!

மே 13, 2018 1014

கவுஹாத்தி (13 மே 2018): அஸ்ஸாமில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி கைது செய்யப்ப் பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் தாபுரி பகுதியை சேர்ந்த சஃபியுர் ரஹ்மான் என்பவருக்கு இரண்டு மனைவிகள். சமீபத்தில் திருமணம் செய்த 20 வயது பெண்ணுடன் அவர் சரியாக குடும்பம் நடத்துவதில்லை என தெரிகிறது.

பெரும்பாலும் முதல் மனைவியுடனே அவர் இருப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்டாவது மனைவி, கணவர் சஃபியுர்ரஹ்மான் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது மர்ம உறுப்பை கத்தியால் சேதப் படுத்தியுள்ளார். காயத்தால் கதறிய சஃபியுர் ரஹ்மானை அருகில் உள்ளோர் மருத்துவ மனையில் அனுமதித்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதற்கிடையே கணவரின் மர்ம உறுப்பை அறுத்த இரண்டாவது மனைவி கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...