கர்நாடகாவில் பாஜக பலே கில்லாடி திட்டம்!

மே 16, 2018 802

பெங்களூரு (16 மே 2018): கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட கில்லாடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைக்க போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் ஆட்சியில் ஏற காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு தொடருகிறது.

இதற்கிடையே பெரும்பான்மை இருந்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...