கர்நாடகாவில் பாஜக வியாழன் அன்று ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு!

மே 16, 2018 563

பெங்களூரு (16 மே 2018): கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சியமைக்க ஆதரவு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே, 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பா.ஜ.கவும் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தான், பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்பு ஆளுநர் இந்த முடிவை அறிவித்துள்ளார். மேலும் பதவியேற்றபின் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...