தேர்வில் தோல்வியடைந்த மகனை மகிழ்வித்த வித்தியாசமான தந்தை!

மே 17, 2018 1062

போபால் (16 மே 2018): மத்திய பிரதேசத்தில் தேர்வில் தோல்வியடைந்த மகனை மகிழ்வித்து ஊக்கப் படுத்தியுள்ளார் மாணவர் ஒருவரின் அப்பா.

மத்திய பிரதேசத்தில் நேற்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அன்சு என்ற மாணவர் தோல்வி அடைந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் மிகவும் மன வேதனையில் இருந்த மகனை மகிழ்விக்க தந்தை நினைத்தார்,

கவலையுடன் தனது தந்தையை சந்தித்த அன்சுவுக்கு தந்தை சுரேந்திரகுமார் இனிப்புகள் ஊட்டி விட்டு கவலை படாதே அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று உற்சாகப் படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...