பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

மே 17, 2018 535

புதுடெல்லி (17 மே 2018): பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.3.50 வரை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக தேர்தலால் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், (இன்று மே-17 ) பெட்ரோல் லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.78.16 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.70.49 காசுகளாகவும் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...