ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம்!

மே 18, 2018 1072

மீரட் (18 மே 2018): உத்திர பிரதேசம் மாநிலம் மீரட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு சென்றவர்களை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் அது கலவரமாக மாறியது.

மீரட் சாஸ்திரி நகர் பகுதியில் புதன் கிழமை இரவு ரம்ஜான் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகைக்கு சென்ற சுமார் 100 முஸ்லிம்கள் மீது தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பாரும் கற்கலால் தாக்கிக் கொண்டன்னர். இதனால் அங்கு பரபரப்பு காணப் பட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...