காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட விவகாரத்தில் டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மே 19, 2018 867

புதுடெல்லி (19 மே 2018): காஷ்மீர் கவுதாவில் 8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரத்தில், சமூக வலைதள நிறுவனங்களுக்கு சிறுமியின் அடையாளங்களை நீக்கம் செய்ய டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமாக வன்புணர்வு செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டார். இந்த கொடூர கொலையில் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது கண்டு ப்பிடிக்கப் பட்டது. மேலும் இவ்வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிறுமி குறித்த அடையாளங்களை வெளியிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் இதர இணைய தளங்களுக்கு சிறுமியின் புகைப்படங்களை நீக்கம் செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை வெளியிட்டமைக்காக சுமார் 12 ஊடக நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...