குமாரசாமி பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின், அகிலேஷ் பங்கேற்பு?

மே 19, 2018 946

பெங்களூரு (19 மே 2018): வரும் திங்கள் அன்று கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர் கட்சித் தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

எடியூரப்பா ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் ஆதரவு MLA-க்கள் உட்பட 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் குமாரசாமி. இதனையடுத்து பெரும்பான்மை பெற்றுள்ள தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தங்களது கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். காங்., - மஜத கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கூறினார். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தங்களுக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து வரும் திங்கட்கிழமை பெங்களூரு கந்தீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் குமாரசாமி குறிப்பிட்டார். தங்களது தரப்பு MLA-க்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக குமாரசாமி கூறினார்.

இந்நிலையில் குமாரசாமி பதவியேற்பு விழாவில், பாஜக அல்லாத கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாயாவதி, அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மகன், மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...