மாட்டிறைச்சிக்காக மற்றொரு முஸ்லிம் அடித்துக் கொலை!

மே 20, 2018 859

போபால் (20 மே 2018): மத்திய பிரதேசம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக மற்றொரு முஸ்லிம் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் சட்னா மாவட்டம் அம்கார் என்ற பகுதியில் ஆறு பேர் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக கூறப் படுகிறது. அவர்களை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதில் ரியாஸ் (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஐந்துப் பேர் கைது செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையில் சிவ்ராஜ் சிங் சவ்கான் முதல்வராக ஆட்சி அமைந்தது முதல் மாட்டிறைச்சிக்கான தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...