பெரும்பான்மையை நிரூபிக்க 24 மணி நேரம் போதும் - குமாரசாமி!

மே 20, 2018 673

பெங்களூரு (20 மே 2018): கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் நிரூபிக்க 24 மணி நேரம் போதும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், நாளை காலை நான் டில்லி செல்ல உள்ளேன். காங்., தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியாவை சந்திக்க உள்ளேன். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுக்க உள்ளேன். பதவியேற்ற பிறகு 24 மணிநேரத்தில் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...