நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் 10 பேர் பலி!

மே 21, 2018 1001

கோழிக்கோடு (21 மே 2018): கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தீவிர காய்ச்சலால் 10 பேர் பலியாகினர். அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதனை சுகாதார துறை உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிபா வைரஸ் கடந்த 1998ம் ஆண்டு முதன்முறையாக மலேசியாவில் கண்டறியப்பட்டது. அங்குள்ள மரங்களில் வாழ்ந்து வந்த பழங்களை தின்னும் ஒரு வகை வவ்வால்களால் இந்த வைரஸ் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த வவ்வால் கடித்த பழங்களை உண்பது வைரஸ் பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் நோய் பாதிப்பு இல்லை என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனினும் கேரள எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...