குஜராத்தில் தலித் தொழிலாளி அடித்துக் கொலை!

May 21, 2018

ராஜ்கோட் (21 மே 2018): குஜராத்தில் தலித் தொழிலாளி கடுமையாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து 5 தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பேன்ட் பெல்ட்டை கழற்றி 5 பேரும் அடித்தனர்.

அப்போது அங்கு வந்த அவரது மனைவி உள்பட இரு பெண்கள் தாக்குதலை தடுத்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். வானியாவை ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!