ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் கல்லூரி மீது மாணவி வழக்கு!

மே 23, 2018 780

மும்பை (23 மே 2018): கல்லூரியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்ததால் ஹோமியோபதி மாணவி கல்லூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த ஹோமியோபதி முதலாம் ஆண்டு மாணவி மும்பை பிவாந்தி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு தேர்வில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுத்ததால், இதனை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தானும் இதர முஸ்லிம் மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தேர்வுப் எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்தப் மாணவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஹிஜாப் அணிவது எங்கள் மத அடையாளங்களின் உரிமை என்று மாணவியின் பெற்றோர் மாநில மருத்துவ கல்வித்துறைக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு மருத்துவ கல்வித்துறை கல்லூரி இவ்விவகாரத்தில் தலையிடாது என்றும் பதில் அளித்திருந்தது.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் திடீரென ஹிஜாப் அணிய தடை விதித்ததால் மாணவி தரப்பு மும்பை நீதிமன்றத்தில் மனு அளித்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லூரி தரப்பின் பதிலை எதிர் பார்த்தது. இதுகுறித்து கல்லூரி தரப்பு நீதிமன்றத்தில் பதிலளிக்கையில், "மாணவியை ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் மாணவி உடல் நலக்குறைவால் பல நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை. மேலும் ஹிஜாப் அணிந்து முகத்தை மூடி வருவதால் மாணவியை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டதாக பதில் அளித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...