குமாரசாமிக்கு மோடி வாழ்த்து!

மே 24, 2018 682

பெங்களூரு (24 மே 2018): கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி மற்றும் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி மற்றும் துணைன் முதல்வராக காங்கிரஸ் ஜி. பரமேஸ்வரா ஆகியோர் நேற்று பதவியேற்றனர். ஆளுநர் வாஜுபாயி வாலா இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உத்திர பிரதேச எதிர் கட்சித் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...