கோலியின் சவாலை ஏற்ற மோடி ராகுலின் சவாலை ஏற்பாரா?

மே 24, 2018 689

புதுடெல்லி (24 மே 2018): பிசிசிஐ கேப்டன் விராட் கோலி பிரதமர் மோடிக்கு சவால் விட்டதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ பதிவுடன் நாம் ஃபிட்டாக இருந்தால்தான் நாடு ஃபிட்டாக இருக்கும் என்று எழுதி விராட் கோலி, உள்ளிட்ட பிரபலங்களை டேக் செய்திருந்தார்.

இதையடுத்து, விராட் கோலி அந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு அதில், தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, தோனி ஆகிய மூன்று பேரை டேக் செய்து ‘பிட்னஸ் சேலஞ்ச்-க்கு’ அழைத்திருந்தார்.

விராட் கோலி விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் எனவும் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் மோடியின் இந்த சேலஞ்சை பாராட்டியுள்ள ராகுல் காந்தி எனக்கும் ஒரு சேலஞ்ச் உள்ளது அதனையும் நீங்கள் ஏற்க வேண்டும் என்று மோடிக்கு சவால் விட்டுள்ளார். அதாவது எரிபொருள் விலையை விலையை குறையுங்கள்; இல்லையெனில் காங்கிரஸ் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி எரிபொருள் விலையை குறைப்பதற்கு உங்களை கட்டாயப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

கோலியின் சேலஞ்சை ஏற்ற மோடி ராகுல் காந்தியின் சேலஞ்சை ஏற்பாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...