அலஹாபாத் பெயர் மாற்றம் உறுதி - துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா!

மே 27, 2018 1026

லக்னோ (27 மே 2018): உத்திர பிரதேச மாநிலம் அலஹாபாத் நகரின் பெயர் பிரயாக் ராஜ் என்று பெயர் மாற்றப்படும் என்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகம்கொண்ட 13-வது மாவட்டமாக அலகாபாத் இருக்கிறது. 1580-ம் ஆண்டு, மாமன்னர் அக்பர் இதற்கு `இலாஹாபாத்’ என்று பெயரிட்டார். பின்னர், ஷாஜகான் காலத்தில் `அலகாபாத்’ என்று மாறியதாக வரலாறு குறிப்பிடுகிறது.

இங்குதான் `கும்பமேளா’ திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடி, திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள். ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் நகரங்களில் கும்பமேளா நடைபெற்றாலும்கூட, அலகாபாத் கும்பமேளா மிகவும் விசேஷமானது.

இந்நிலையில் பிரயாக் ராஜ்' என்று மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுர்யா அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அர்த்த கும்பமேளா (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது மகா கும்பமேளா; ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது அர்த்த கும்பமேளா) விழாவுக்குள் பெயர் மாற்றப்படும் என்றும், விழாவுக்கான அழைப்பிதழ், பேனர்கள் எல்லாமே புதிய பெயரில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...