எங்கள் அமெரிக்க பயணத்தை அரசியலோடு ஒப்பிட வேண்டாம்: ராகுல் காந்தி!

மே 28, 2018 500

புதுடெல்லி (29 மே 2018): நானும் என் தாய் சோனியா காந்தியும் அமெரிக்கா சென்றுள்ளதை அரசியலோடு ஒப்பிட வேண்டாம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் சென்றுள்ளார். சோனியாவுக்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் இந்தியா திரும்ப ராகுல் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் அமெரிக்காவிலேயே சிறிது காலம் ஓய்வு எடுக்க சோனியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்கா புறப்பட்டுவதற்கு முன் ராகுல் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், தாய் சோனியாவின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அவருடன் செல்வதால் சில நாட்கள் இந்தியாவில் இருக்க மாட்டேன். அதனால் இதை பூதாகரமாக்கி தகவல் பரப்ப, அதிகப்படியாக பாடுபட வேண்டாம் என பா.ஜ.க. சமூக வலைதளத்தில் இருக்கும் நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இந்தியா வந்து விடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...