நீங்க கூட்டுங்க ஆனால் நாங்க குறைப்போம் - கேரள அரசு அதிரடி!

மே 30, 2018 708

திருவனந்தபுரம் (30 மே 2018): பெட்ரோல் டீசல் விலையை குறைத்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...