பீகாரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

June 01, 2018

பாட்னா (01 மே 2018): பீகாரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

பீகாரில் சீதாமார்கி மாவட்ட நல அலுவலராக இருந்தவர் ஷுப் நாராயண் தத் (57). இவர் சீதாமார்கி மாவட்டத்தில் உள்ள கைலாஷ் பூரி காலனியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் நேற்று மாலை 7:30 மணியளவில் வீட்டின் வெளியே உலாவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கிள் வந்த மூன்று மர்ம நபர்கள் மிக அருகில் இருந்து அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஷுப் நாராயண் தத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது 3 குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர். அவர்கள் முகத்தை துணியால் மறைத்து வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மாவட்ட நல அலுவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!