கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் - அறிக்கை தாக்கல்!

ஜூன் 03, 2018 607

பெங்களூரு (03 ஜூன் 2018): கவுரி லங்கேஷ் படுகொலைக்கு காரணம் இந்துத்துவ எதிர்ப்பு கருத்தே என்று கர்நாடக சிறப்பு புலனாய்வு துறை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பிரபல பத்திரிகையாளரான இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவருடைய வீட்டு முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவினர், விசாரணை நடத்தி சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் தொடர்புள்ள நவீன் குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் கர்நாடக சிறப்பு புலனாய்வு துறை தாக்கல் செய்துள்ள 651 பக்க அறிக்கையில் கவுரி லங்கேஷ் இந்துத்வ எதிர்ப்பு கருத்துக்களை அதிகம் பதிவு செய்ததே அவரது படுகொலைக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...