மோடியை கைது செய்ய சிபிஐ விரும்பியது - முன்னாள் டிஐஜி வன்சாரா!

ஜூன் 06, 2018 756

ஆமதாபாத் (06 ஜூன் 2018): இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை கைது செய்ய சிபிஐ விரும்பியது என்று முன்னாள் டிஐஜி வன்சாரா தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு போலி எண்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் உட்பட நான்குபேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளியாகியுள்ள முன்னாள் டிஐஜி வன்சாரா செவ்வாயன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

முன்னதாக இவ்வழக்கில் எனக்கு தொடர்பில்லை என்றும் முதல்வராக இருந்த மோடியும் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவும் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதனை செய்ததாக அப்போதே இதுகுறித்து வாக்குமூலம் அளித்ததாகவும், சிபிஐ மோடியையும், அமித்ஷாவையும் கைது செய்ய விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை என்றும் தன்னை இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் வன்சாரா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது மோடி இந்திய பிரதமராகவும், அமித்ஷா பாஜக தேசிய தலைவராகவும் உள்ளனர். மேலும், இவ்வழக்கிலிருந்து மோடியும், அமித்ஷாவும் கடந்த 2014 ஆம் ஆண்டு இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...