பாஜக, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் இஃப்தார் நிகழ்ச்சி காமெடியானது: சரத் பவார்!

ஜூன் 07, 2018 948

மும்பை (07 ஜூன் 2018): ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜக நடத்துவதாக உள்ள இஃப்தார் நிகழ்ச்சி காமெடியான தகவல் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

புதன் அன்று மும்பை ஹஜ் இல்லத்தில் நடைபெற்ற இஃப்தா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், " சில செய்தி நிறுவனங்கள் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இணைந்து இஃப்தார் நிகழ்ச்சி நட்த்துவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. நாக்பூரை சேர்ந்த சில அமைப்புகள் இதனை வெளியிட்டுள்ளன. இது பெரும்பாலும் பொய்யானதாக இருக்கும். அல்லது உள் நோக்கம் கொண்டதாக இருக்கும். மற்றபடி முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ் இஃப்தார் நடத்துவது காமெடியானதை தவிற வேறு என்ன இருக்க முடியும்?" என்றார்.

மேலும் நாட்டு மக்கள் தற்போது சரியான பாதையில் செல்கின்றனர். வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். இனி பாஜக வெற்றி பெறுவது கடினம்." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...