இந்து முஸ்லிம் இளம் ஜோடி மர்ம மரணம்!

ஜூன் 07, 2018 845

மும்பை (07 ஜூன் 2018): மும்பையில் முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் கார் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

மும்பை நீதிமன்றம் அருகே சுபர்பான் மோலுத் பகுதியில் நீண்ட நேரமாக மர்மமாக நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடியை போலீசார் உடைத்து பார்த்தபோது உள்ளே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். பின்பு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருதுவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் அவர்கள் விஷம் அருந்தியதாகவும் கூறியுள்ளனர்.

விசாரணையில் ஆணின் பெயர் சல்மான் அஃப்ரோஸ் ஆலம் கான் (26)என்பதும், பெண்ணின் பெயர் மனீஷா நேகி (21) என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இருதரப்பின் குடும்பத்திலும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் தற்கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் தற்கொலை குறித்து அவர்கள் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் இந்து முஸ்லிம் ஜோடி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் மும்பை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...