பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அறிவுரை - காங்கிரஸ் அதிருப்தி!

ஜூன் 08, 2018 715

நாக்பூர் (08 ஜூன் 2018): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பேசியதற்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசும் போது,: “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. அந்த பன்முகத்தன்மைக்கு அளிக்கும் மரியாதை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மூலமே நாம் நம்முடைய வலிமையை பெறுகிறோம். அதை நாம் பெருமையுடன் கொண்டாடி வருகிறோம்.பல்வேறு இன, மொழி மற்றும் மதங்களை பின்பற்றும் மக்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். எனவே மக்களிடையே சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை இல்லை என்றால், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இருந்து வரும் தனித்துவ அடையாளம் நீர்த்துப்போய்விடும்.மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கூட்டத்தில் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி நிலவியுள்ளது. குறிப்பாக அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஹமது பட்டேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...