ரஜீவ் காந்தியை போல பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் - திடுக்கிடும் தகவல்!

ஜூன் 08, 2018 671

புதுடெல்லி (08 ஜூன் 2018): பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக காவல்துறையினருக்கு கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனே காவல்துறையினர் மாவோயிஸ்டுகள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்தது. மேலும், பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தின்போது அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட முறையையே பின்பற்றி மோடியை கொலை செய்ய, மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த திடுக்கிடும் செய்தி காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...