காங்கிரஸ் நடத்தும் இஃப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்கிறார்!

ஜூன் 12, 2018 624

புதுடெல்லி (12 ஜூன் 2018): காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருபவர் ராகுல் காந்தி. இவர் கட்சி தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, இப்தார் விருந்து அளிக்க உள்ளார். காங்கிரஸ் சார்பில் ஜூன் 13- ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடந்த 2015-ல் சோனியா காந்தி தலைவராக இருந்தபோது இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் இப்தார் நிகழ்ச்சி என்பதால், இதனை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாக பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என செய்தி வெளியானது.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள இப்தார் விருந்தில் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்திப் சுர்ஜிவாலா கூறுகையில், இப்தார் விருந்தில் கலந்து கொள்ள வருமாறு நாங்கள் விடுத்த அழைப்பை பிரணாப் ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் காங்கிரசின் எதிர்ப்பை மீறி பிரணாப் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்க்து.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...