முஸ்லிம் மத குருமார்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

ஜூன் 12, 2018 688

ராஞ்சி (12 ஜூன் 2018): ராஜஸ்தான் மாநிலம் ராஞ்சியில் இரவு தொழுகை முடித்துவிட்டு வந்த இரண்டு முஸ்லிம் மதகுருமார்கள் மீது ஒரு கும்பல் கடும் தாக்குதலில் ஈடுபட்டதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இரவு ஜார்கண்ட் மாநில ராஞ்சியில் இரவு தொழுகை முடித்துவிட்டு வீடுதிரும்பி கொண்டிருந்த இரு இஸ்லாமிய மத குருமார்களை சுமார் 20-25 நபர்கள் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, மத துவேஷ கருத்துக்களை அவர்கள் மீது கூறி பின்னர் 'ஜெய் ஸ்ரீராம்' என கூறுமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஒரு மதகுரு சில காயங்களுடன் தப்பியோடிவிட்டார். மற்றொருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளை பிடிக்க கூட்டு படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி பிரபாத் குமார் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ஜார்கண்டில் அடிக்கடி இவ்வாறான இனவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக்கெண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில், பத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் மாடு அல்லது மாட்டிறைச்சி பெயரில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...