கவுரி லங்கேஷ் படுகொலையில் மேலும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பு!

ஜூன் 13, 2018 582

பெங்களூரு (12 ஜூன் 2018): ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் மேலும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கு தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டார். இந்நிலையில் இதில் இந்துதுவா பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக ஏற்கனவே சந்தேகிக்கப் பட்டது.

இந்த கொலையில் தொடர்புடைய ஹிந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த நவீன் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல தகவல்கள் திரட்டப் பட்டன. இந்நிலையில் மேலும் நான்கு இந்துத்வா அமைப்பினர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கவுரி லங்கேஷ் இந்துதுவாவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தவர் என்பதும் அவருக்கு ஏற்கனவே இந்துத்வா அமைப்பினரின் மிரட்டல் இருந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...