ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட காத்திருந்த குடும்பம் இன்று துக்கத்தில்!

ஜூன் 13, 2018

ஸ்ரீநகர் (13 ஜூன் 2018): காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த குலாம் ஹசன் மற்றும் குலாம் ரசூல் ஆகிய இரண்டு கான்ஸ்டபிள்களின் குடும்பம் ரம்ஜான் பண்டிகைக்கு இரண்டு தினங்கள் இருக்க இருவரையும் இழந்து துக்கத்தில் வாடுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இரவில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு நேற்று அதிகாலை அந்த பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

இதற்கு பதிலடியாக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், மூன்று போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு போலீசாரும் ரம்ஜான் பண்டிகைக்கு ஊருக்கு வருவதஅக அவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்களின் உடல்கள்தான் அவர்களின் வீட்டுக்கு கொண்டு செல்லப் பட்டன.

இதில் இதில் குலாம் ரசூலின் மகன் தந்தையின் உடலைப் பார்த்து,"ஏன் அப்பா எங்களை விட்டு பிரிந்தாய்? ரம்ஜான் பண்டிகைக்கு வருவாய் என காத்திருந்தோமே எனக்கு பொருட்கள் வாங்கி வருவேன் என்றுப் சொன்னாயே இப்போது எங்கே அந்த பொருட்கள்? என்று கூறும் அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குலாம் ரசூலுக்கு மூன்று மகன்கள் மற்றும் வயது முதிர்ந்த பெற்றோர் மனைவி உண்டு. அதேபோல குலாம் ஹசனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் 9 வயது மகள், மற்றும் மனைவி உண்டு.

உயிரிழந்த இருவரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!