ஃபிட்னஸ் சவால் விடுத்த மோடிக்கு குமாரசாமி பதிலடி!

ஜூன் 14, 2018 634

புதுடெல்லி (14 ஜூன் 2018): ஃபிட்னஸ் சவால் விடுத்த பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை நேற்று வெளியிட்டார். காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். , குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்தார்.

இந்நிலையில் மோடியின் சவாலுக்கு பதிலளித்துள்ள குமாரசாமி, "என் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை உள்ள பிரதமருக்கு நன்றி. நான் தினமும் உடற்பயிற்சி, மற்றும் யோகா ஆகியவை தொடர்ந்து செய்து வருகிறேன். அதேவேளை எங்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான சவால்கள் நிறைய காத்திருக்கின்றன. எனவே எங்கள் மாநில வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும் என்று குமாரசாமின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதமருக்கு பதிலளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...