இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ரம்ஜான் நோன்பு வைத்த பிளஸ் டூ மாணவிகள்!

ஜூன் 14, 2018 939

சிட்டூர் (14 ஜூன் 2018): இந்து முஸ்லிம் பாகுபாடின்றி ஒட்டு மொத்த பிளஸ் டூ வகுப்பு மாணவிகள் ரம்ஜான் நோன்பு வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிட்டூர் அரசு விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவிகள் ஒரு நாள் நோன்பு வைத்து இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ஒரு இந்து மாணவி தெரிவிக்கையில், "நாம் உலகில் எவ்வளவோ மக்கள் உணவின்றி பசி யுடன் வாடும் மக்களை பார்க்கிறோம். அவர்களின் உண்மையான பசியை உணர வைக்கிறது நோன்பு. மேலும் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ இந்த நோன்பு வைத்தலும் உதவுகிறது. எங்கள் பள்ளியில் நோன்பு என்று இல்லை அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி எங்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறோம்." என்றார்.

மாணவிகளின் இதுபோன்ற செயல்களுக்கு பெற்றோரும் உறுதுணையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...