பசு பயங்கரவாதிகளால் இரண்டு இஸ்லாமியர்கள் படுகொலை!

ஜூன் 15, 2018 717

குட்டா (15 ஜூன் 2018): ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குட்டா மாவட்டத்தில் சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் விற்பனைக்காக எறுமை மாடுகளை வாங்கிச் சென்றுக் கொண்டிருந்தனர். பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தை இடைமறித்து நின்ற பசு பயங்கரவாத கும்பல் இரண்டு இஸ்லாமியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், இரண்டு பேரையும் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து கொலையில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மாட்டுக்காக படுகொலை செய்வது பாஜக ஆட்சி தொடங்கியது முதல் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...