காஷ்மீரில் பத்திரிகையாளரை கொன்ற கொலையாளிகள் இவர்கள்தான்!

ஜூன் 16, 2018 701

ஸ்ரீநகர் (16 ஜூன் 2018): காஷ்மீரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்ற கொலையாளியின் சிசிடிவி போட்டோ வெளியானது.

ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஏற்கனவே 2000த்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்போது முதல் புஹாரிக்கு காவல் துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டுவதில் புஹாரி நீண்ட நாட்களாக முக்கியப் பங்காற்றி வந்தார்.

ஈத் பெருநாளைக்கு முந்தைய தினம் இப்படுகொலை நடந்துள்ள நிலையில் காஷ்மீர் முதல்வர் மஹபூபா முஃப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதனை விசாரித்து வரும் போலீசார் இந்த கொலையை செய்த மூன்று பேரின் சிசிடிவி போட்டோவை வெளியிட்டுள்ளனர். அதில் ஒருவர் தலை கவசம் அணிந்ந்துள்ளார். மற்ற இருவர் முகமூடி அணிந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...