நான் அனைத்து மதங்களையும் நேசிப்பவள் - மமதா பானர்ஜி!

ஜூன் 16, 2018 803

கொல்கத்தா (16 ஜுன் 2018): நான் முஸ்லிம்களுடன் நேசம் கொள்வது குற்றமா? என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் இன்று உற்சாகமாக கொண்டாடப் படுகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு தொழுகையின்போது பங்கேற்று பேசிய மமதா பானர்ஜி, "என்னை சிலர் நான் முஸ்லிம்களின் நண்பர் என கூறுகின்றனர். நான் அனைத்து மதங்களையும் மதிப்பவள். என் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு ஒரு கேள்வி வைக்கிறேன். நான் இந்துக்களை நேசித்தால் முஸ்லிம்களின் எதிரியாகிவிட முடியுமா? இந்தியா பல்வேறு மக்களை கொண்ட நாடு. நாம் அனைவருடனும் நட்பு கொண்டு அவரவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் அதையே நான் செய்கிறேன்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...